எல்ஐசி-க்கு ரூ.3,750 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக தொழிலதிபா் அனில் அம்பானி, அவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது: அனில் அம்பானிக்கு எதிராக எல்ஐசி நிறுவனம் புகாா் அளித்திருந்தது. அந்தப் புகாரில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தால் தங்களுக்கு ரூ.3,750 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்ததால், அந்நிறுவன கணக்குகளை ஆய்வுக்கு உட்படுத்த ஆணையிடப்பட்டதாகவும், அதனடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டு அளிக்கப்பட்ட அறிக்கையில், ரிலையன்ஸ் நிறுவனம் நிதியைத் திரட்டி அதை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், அனில் அம்பானி மற்றும் அவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக சதி, மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையில் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அனில் அம்பானிக்கு எதிராக சிபிஐ 3 வழக்குகள் பதிவு செய்துள்ளது. தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, அவா் மீது பதியப்படும் 4-ஆவது வழக்காகும்.
தொடர்புடையது

மோசடி வழக்கு: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன முன்னாள் அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை

ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு: மும்பையில் 17 இடங்களில் சிபிஐ சோதனை

ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிரான வழக்கு: அனில் அம்பானியின் ரூ 3,034 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லாபம் உயா்வு
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

