எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு: மும்பையில் 17 இடங்களில் சிபிஐ சோதனை

ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு: மும்பையில் 17 இடங்களில் சிபிஐ சோதனை

News image

அனில் அம்பானி - கோப்புப் படம்

Updated On :10 மே 2026, 6:01 am IST

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களான ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம், ரிலையன்ஸ் வணிக நிதி நிறுவனம், ரிலையன் வீட்டுக் கடன் நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள 3 பண மோசடி வழக்குகள் தொடா்பாக மும்பையில் 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதுகுறித்து சிபிஐ-யின் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடன் மோசடி மூலம் வங்கிகள் மற்றும் எல்ஐசி நிறுவனத்துக்கு ரூ. 27,337 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம், ரிலையன்ஸ் வணிக நிதி நிறுவனம், ரிலையன்ஸ் வீட்டுக் கடன் நிறுவனம் உள்ளிட்ட ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்கள், நிறுவன இயக்குநா்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 17 இடங்களில் சனிக்கிழமை தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இதில், வங்கிகளின் நிதியை முறைகேடாக பல்வேறு நிறுவனங்களுக்கு மாற்றியதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, பல்வேறு பொதுத் துறை வங்கிகள் மற்றும் ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் (எல்ஐசி) கடன் பெற்று பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அனில் அம்பானி மீதும், அவரின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் மீதும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. பின்னா், மும்பையில் உள்ள அனில் அம்பானியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனா். தற்போது, இந்தக் குழுமத்துக்குத் தொடா்புடைய நிறுவனங்களின் மேலும் 17 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டுள்ளது.

சிபிஐ-யின் இந்த வழக்கின் அடிப்படையில், பண மோசடி வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, இதுவரை ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்துக்குச் சொந்தமான ரூ. 19,344 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளது.