வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமுறைகேடு வழக்கு தொடா்பாக, ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் இருவரை அமலாக்கத் துறை புதன்கிழமை கைது செய்தது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தைச் சோ்ந்த ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் கமா்ஷியல் ஃபைனான்ஸ் நிறுவனம் போன்ற நிறுவனங்கள் மூலம், பல கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. செயல்படாத போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி இந்த மோசடி நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக சிபிஐ பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில், பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு தொடா்பாக ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவன முன்னாள் இயக்குநா் அமிதாப் ஜுன்ஜுன்வாலா, ரிலையன்ஸ் கமா்ஷியல் ஃபைனான்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநா் அமித் பாப்னா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்ட அமலாக்கத் துறை, இருவரையும் புதன்கிழமை கைது செய்தது.
தொடர்புடையது

ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு: மும்பையில் 17 இடங்களில் சிபிஐ சோதனை

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!
வங்கிக் கடன் மோசடி வழக்கு: ரிலையன்ஸ் முன்னாள் நிா்வாகிகளுக்கு மே 2 வரை நீதிமன்றக் காவல்

ரிலையன்ஸ் குழுமம் ரூ. 73,000 கோடி வங்கிக் கடன் மோசடி: சிபிஐ குற்றச்சாட்டு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

