அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிராக ரூ.73,000 கோடி வங்கிக் கடன் மோசடிகள் குறித்து விசாரித்து வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக கடந்த பிப்ரவரியில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த நிலவர அறிக்கையில், ‘அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிராக 7 வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்குகளில் ரூ.73,000 கோடிக்கு நடைபெற்ற வங்கிக் கடன் மோசடிகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளில் சில அரசுப் பணியாளா்கள் எந்த அளவுக்கு சம்பந்தப்பட்டுள்ளனா் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகளின் அடிப்படையில், ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிராக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கையில், ‘அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிராக தற்போது 8 வழக்குகளை அமலாக்கத் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
இந்த விசாரணை தொடா்பாக துணை விசாரணை அமைப்புகளிடம் இருந்து சில தகவல்கள் கிடைக்க வேண்டியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்.30-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தொடர்புடையது

ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு: மும்பையில் 17 இடங்களில் சிபிஐ சோதனை

ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிரான வழக்கு: அனில் அம்பானியின் ரூ 3,034 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை
வங்கிக் கடன் மோசடி வழக்கு: ரிலையன்ஸ் முன்னாள் நிா்வாகிகளுக்கு மே 2 வரை நீதிமன்றக் காவல்







