தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இரு ராணுவ வீரர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச், ரஜெளரி மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதல்களில் இரு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 7:38 pm

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச், ரஜெளரி மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதல்களில் இரு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
பூஞ்ச் மாவட்டத்தை எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் வியாழக்கிழமை காலை 8.15 மணியளவில் சிறியரக குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் பாகிஸ்தான் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். 
தொடர்ந்து ரஜெளரி பகுதியில் காலை 10.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் இதேபோன்ற ஒரு தாக்குதலை நடத்தியது. 
இரண்டு பகுதிகளிலும் இந்திய ராணுவத்தினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதையடுத்து, பாகிஸ்தான் தரப்பு தாக்குதலை நிறுத்திக் கொண்டது.
பாகிஸ்தான் வீரர்கள் வீசிய குண்டால் இந்தியத் தரப்பில் இரு ராணுவ வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, நெளஷேரா பகுதியில் புதன்கிழமையன்றும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியது.
இந்த ஆண்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையொட்டிய எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதி மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். 
அவர்களில் 21 பேர் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்; 12 பேர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.