திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்குான பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மொத்தம் 60 தொகுதிகளைக் கொண்ட திரிபராவில் 59 இடங்களுக்கு பிப்ரவரி 18-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரின் திடீர் மறைவு காரணமாக ஒரு தொகுதிக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதில் 92 சதவீத வாக்குகள் பதிவாகின.
இங்கு பாஜக மற்றும் ஐபிஎஃப்டி கட்கள் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. 25 ஆண்டுகளாக மாணிக் சர்கார் தலைமையில் ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் இங்கு போட்டியிட்டன.
இதில் பாஜக கூட்டணி 41 இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறது. அவற்றில் ஆட்சி அமைக்கத் தேவையான பாதிக்கும் (31 இடங்கள்) மேல் 33 இடங்களில் பாஜக முன்னிலையில் நீடிக்கிறது. கூட்டணி கட்சியான ஐபிஎஃப்டி 7 இடங்களில் முன்னிலையும், ஒரு இடத்தைக் கைப்பற்றியும் உள்ளது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 18 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதன்மூலம் அங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதில் அம்மாநில முதல்வராக மாணிக் சர்கார் கடந்த 20 வருடங்களாக ஆட்சி செய்து வருகிறார்.
முன்னதாக, 2013-ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலின் போது பாஜக 50 தொகுதிகளில் போட்டியிட்டு 49 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. அப்போது பாஜக-வுக்கு பதிவான வாக்குகள் வெறும் 1.5 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வானூா் சட்டப்பேரவைத் தொகுதி: அதிமுகவின் கோட்டையில் தடம் பதிக்குமா திமுக?

ஆத்தூரை தக்க வைக்குமா அதிமுக?

விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை! சரத்குமார் சிறப்பு நேர்காணல்!

கூடலூா் நகர வீதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


