வளர்ச்சி பற்றி எங்களுக்கு ஒன்றும் அறிவுரை கூற வேண்டாம்: ஆதித்யநாத்தை கிண்டல் செய்த சித்தராமையா!

வளர்ச்சி பற்றி எங்களுக்கு நீங்கள் ஒன்றும் அறிவுரை கூற வேண்டாம் என்று உத்தப்பிரதேச பாராளுமன்ற இடைத்தேர்தல் தோல்வி குறித்து, அம்மாநில முதல்வர் ஆதித்யநாத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா கிண்டல்.. 
வளர்ச்சி பற்றி எங்களுக்கு ஒன்றும் அறிவுரை கூற வேண்டாம்: ஆதித்யநாத்தை கிண்டல் செய்த சித்தராமையா!

பெங்களூரு: வளர்ச்சி பற்றி எங்களுக்கு நீங்கள் ஒன்றும் அறிவுரை கூற வேண்டாம் என்று உத்தப்பிரதேச பாராளுமன்ற இடைத்தேர்தல் தோல்வி குறித்து, அம்மாநில முதல்வர் ஆதித்யநாத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா கிண்டல் செய்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வராக ஆதித்யநாத்தும், துணை முதல்வராக கேசவ் ப்ரசாத் மவுரியாவும் பதவியேற்றதைத் தொடந்து, முறையே அவர்கள் வகித்து வந்த கோரக்பூர் மற்றும் புல்பூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இந்த தேர்தல் முடிவுகள்  புதனன்று வெளியானது. இந்த இரண்டு தொகுதிகளிலும் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்தது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் வளர்ச்சி பற்றி எங்களுக்கு நீங்கள் ஒன்றும் அறிவுரை கூற வேண்டாம் என்று உத்தப்பிரதேச பாராளுமன்ற இடைத்தேர்தல் தோல்வி குறித்து, அம்மாநில முதல்வர் ஆதித்யநாத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா கிண்டல் செய்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

உத்தரப் பிரதேச முதல்வரும், துணை முதல்வரும் கைவசம் வைத்திருந்த தொகுதிகளில் பாஜக அவமானகரமான தோல்வி அடைந்துள்ளது.

வரலாறு படைத்த வெற்றிக்காக சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு வாழ்த்துக்கள். பாஜக அல்லாத கட்சிகளின் ஒற்றுமை இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இனியாவது வளர்ச்சி பற்றி கர்நாடக அரசுக்கு  அறிவுரை சொல்வதை யோகி ஆதிதிநாத் குறைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த இரண்டு மாதங்களில் பாஜக சார்பாக கர்நாடகாவில் நடந்த நான்கு தேர்தல் பிரசார பேரணிகளில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றுள்ளார். அப்பொழுது அவர் காங்கிரசால் கரநாடகவிற்கு வளர்ச்சியைக் கொண்டு  வர இயலவில்லை; எனவே காங்கிரஸ் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com