மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ட்விட்டரில் பெயர் மாற்றம் செய்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்!

தனது அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் கணக்கின் பெயரை காங்கிரஸ் தலைவர் ராகுல் மாற்றியுள்ளார்.

News image
Updated On :17 மார்ச் 2018, 9:58 am

காங்கிரஸ் தலைவர் ராகுல், சமூகவலைதளமான ட்விட்டரில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பரபரப்பாக இயங்கி வருகிறார். அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தனது கருத்துக்களையும், விமரிசனங்களையும் அதில் பதிவிட்டு வருகிறார்.

குறிப்பாக, பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாகச் சாடி வருகிறார். அதிலும், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் தொடர்பாகவும், அதில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி வருகிறார்.

பணமதிப்பிழப்பு, பொருளாதார சரிவு, ஜிஎஸ்டி வரியை கப்பர் சிங் வரி என்று அவ்வப்போது கேலி செய்து வரும் ராகுல், தனது ட்விட்டர் பக்கத்தின் பெயரை சனிக்கிழமை மாற்றியுள்ளார். 

முன்னதாக, ராகுல் ட்விட்டர் கணக்கு இயக்கத்தின் பின்னணியில் பலர் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தபோது, தனது செல்ல நாய் தான் தன்னுடைய ட்விட்டர் கணக்கை பராமரித்து வருவதாக ட்வீட் செய்தார். மேலும் விடியோ ஒன்றையும் அதனுடன் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.