பாஜகவுக்கு எதிரான அணியில் காங்கிரஸையும் இணைக்கும் மம்தாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. அதேவேளையில் தேசிய அளவில் கட்சிகளை ஓரணியாகத் திரட்டுவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.
அண்மைக் காலமாக பல்வேறு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறது. இதையடுத்து அக்கட்சியை வீழ்த்துவதற்காக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வியூகம் வகுத்து வருகிறார்.
அதன்படி, மாநில கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பாஜகவுக்கு எதிராக களமிறக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். முன்னதாக, பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை மம்தா உருவாக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதைப் பொய்யாக்கும் விதமாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் மம்தா சந்தித்துப் பேசினார்.
மேலும், பாஜக அதிருப்தி தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, சத்ருஹன் சின்கா, மத்திய முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஷோரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத், தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்டிர சமிதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
பாஜவைத் தோற்கடிக்க அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஓரணியாகத் திரளுவது சாத்தியமற்ற ஒன்று. உதாரணமாக மேற்கு வங்கம், கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பிரதான எதிரிகளாக திரிணமூல் காங்கிரஸும், காங்கிரஸும் முறையே உள்ளன. அங்கு அனைத்து கட்சிகளும் ஒன்று சேர இயலாது. அதேவேளையில், அத்தகைய சூழல் இல்லாமல் பாஜக மட்டுமே பொது அரசியல் எதிரியாக உள்ள மாநிலங்களில் மாற்று கட்சிகள் அனைத்தும் இணைந்து வியூகம் வகுக்கலாம்.
தற்போது பாஜகவுக்கு எதிரான அணியில் காங்கிரஸையும் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மம்தா மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றார் சுதாகர் ரெட்டி.
முன்னதாக சோனியாவைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, 'குறிப்பிட்ட மாநிலத்தில் எந்தக் கட்சி வலுவாக இருக்கிறதோ அதனுடன் பிற கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பாஜகவை தோற்கடிக்க வேண்டும்' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே மாத எண்கணித பலன்கள் – 8

மே மாத எண்கணித பலன்கள் – 7

மே மாத எண்கணித பலன்கள் – 6

மே மாத எண்கணித பலன்கள் – 5
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

