6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

கர்நாடக தேர்தல் தேதியை கசிய விட்டது நான் அல்ல: அமித் மால்வியா விளக்கம்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை, தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிக்கும் முன்னரே ஊடகங்களில் வெளியான விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்து.

News image
Updated On :29 மார்ச் 2018, 5:48 am


புது தில்லி: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை, தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிக்கும் முன்னரே ஊடகங்களில் வெளியான விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்து.

பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த அமித் மால்வியா, தனது டிவிட்டர் பக்கத்தில் தேர்தல் தேதியை முன்னதாக அறிவித்ததாகக் குற்றச்சாட்டும் எழுந்தது.

முற்பகல் 11.08 மணிக்கு, தனது டிவிட்டர் பக்கத்தில் அமித் மால்வியா கர்நாடக தேர்தல் தேதியை அறிவித்தார். தேர்தல் ஆணையரோ 11.30 மணிக்குத்தான் தேதியை அறிவித்தார். இது குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு அமித் மால்வியா தரப்பில் விளக்கக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 11.06 மணிக்கு ஆங்கில செய்தித் தொலைக்காட்சியில் வெளியான செய்தியைப் பார்த்தே தான் டிவீட் செய்ததாகக் கூறி, ஆங்கில செய்தித் தொலைக்காட்சியின் ஸ்க்ரீன் ஷாட்டுகளையும் ஆதாரமாக இணைத்துள்ளார்.

இதற்கிடையே, எங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த செய்தியைப் போட்டதாகவும், அது உறுதியான தகவல் இல்லை என்றும் ஆங்கில செய்தித் தொலைக்காட்சித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இப்படி எல்லோருமே நான் அவன் இல்லை என்று சொன்னால், அந்த 'அவன்' யார் என்று எப்படி கண்டுபிடிப்பது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.