சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

உ.பி.: போலியாக வங்கி நடத்தியவர் கைது 

வங்கிகளில் தொழிலதிபர்கள் பலர் கடன் மோசடி செய்திருப்பது வெளிப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ஒருவர் போலியாக வங்கி நடத்தி மோசடி செய்திருப்பது

Updated On :29 மார்ச் 2018, 7:34 pm

வங்கிகளில் தொழிலதிபர்கள் பலர் கடன் மோசடி செய்திருப்பது வெளிப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ஒருவர் போலியாக வங்கி நடத்தி மோசடி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பலியா மாவட்டத்தின் முலாயம் நகர் பகுதியில் அண்மையில் கர்நாடகா வங்கியின் கிளை ஒன்று திறக்கப்பட்டது. இந்த வங்கியின் செயல்பாடுகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்ததை அடுத்து, அதே மாவட்டத்தில் உள்ள மற்றொரு கர்நாடகா வங்கிக் கிளையில் சிலர் இது தொடர்பாக தெரிவித்தனர். அப்போது, கோப்புகளை ஆய்வு செய்த அதிகாரிகள், அவர்கள் கூறும் இடத்தில் தங்கள் வங்கிக்கு கிளையே இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, அவர்கள் உடனடியாக வங்கியின் உயரதிகாரிகளுக்கு இது தொடர்பாக புகார் அளித்தனர். உடனடியாக பலியாவுக்கு வந்த கர்நாடகா வங்கியின் உயரதிகாரிகள், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் இது தொடர்பாக புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த போலி வங்கிக் கிளைக்கு விரைந்த போலீஸார், அங்கு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வினோத் குமார் காம்ளி என்பவர், போலியாக இந்த வங்கிக் கிளையை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.
அங்கிருந்து ரூ.1.37 லட்சம் பணம், மூன்று கணினிகள், ஒரு மடிக்கணினி, இரு செல்லிடப்பேசிகள், வங்கி பாஸ்புக்குகள், பணத்தை டெபாசிட் செய்வதற்கான ரசீது உள்ளிட்ட ஏராளமான போலி ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். வினோத் குமாரின் பெயரில் போலியான ஆதார், கர்நாடகா வங்கி மேலாளர் என்ற போலியான அடையாள அட்டை என பல ஆவணங்களும் 
போலீஸாரிடம் சிக்கியுள்ளது.
தன்னை வங்கி மேலாளர் என்று அப்பகுதி மக்களிடம் வினோத் குமார் காம்ளி அறிமுகப்படுத்திக் கொண்டு, பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு போலி வங்கிக் கணக்கு தொடங்கி பாஸ்புக் கொடுத்துள்ளார். மேலும், சிலரிடம் பல லட்சம் ரூபாய் வரை நிரந்தர வைப்புத் தொகையும் பெற்றுள்ளார். கைது செய்யப்பட்ட வினோத் குமாரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.