மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சட்டப்பேரவைத் தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுவேன்

எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியிலிருந்து போட்டியிடப்போவதாக அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

News image
Updated On :29 மார்ச் 2018, 7:37 pm

எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியிலிருந்து போட்டியிடப்போவதாக அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இது தொடர்பாக மைசூரில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி: 
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட தீர்மானித்துள்ளேன். இந்தத் தொகுதியில் நான் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி பேசி வருகிறார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் நான் எத்தனை முறை போட்டியிட்டுள்ளேன் என்பது அவருக்கு தெரியாது என நினைக்கிறேன். இத் தொகுதியில் நான் 7 முறை போட்டியிட்டு அதில் 5 முறை வெற்றிபெற்றிருக்கிறேன். இந்த முறை மக்கள் ஆதரவுடன் வெற்றிபெறுவது நிச்சயம். 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே மக்கள் ஆதரவுடன் நான் வெற்றிபெற்றேன். அதை குமாரசாமிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் என்றார் முதல்வர் சித்தராமையா.
முன்னதாக, புதன்கிழமை பேட்டியளித்த குமாரசாமி, சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டால் தோல்வி அடைவது உறுதி. கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் சித்தராமையா 257 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றார். எனவே அவர் இந்த முறை அவர் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடமாட்டார். அநேகமாக நரசிம்மராஜா தொகுதியில் போட்டியிடக்கூடும் என்று தெரிவித்திருந்தார்.
முதல்வர் சித்தராமையா 2008-ம் ஆண்டு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டதை அடுத்து மைசூரில் வருணா தொகுதியிலிருந்து போட்டியிட்டு வருகிறார். ஆனால் இந்த முறை அவர் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். 
2018 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதுதான் எனது கடைசி தேர்தலாக இருக்கும் என்று கூறிவரும் சித்தராமையா, தமது வழக்கமான வருணா தொகுதியில் மகன் யதீந்திராவை களத்தில் இறக்க திட்டமிட்டுள்ளாதக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.