புது தில்லி: சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் சந்தேகப்படும் டியூஷன் பயிற்சியாளரிடம் தில்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்2 பொருளாதாரம் மற்றும் 10ம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான விவகாரம் தொடர்பாக இருவேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில், முக்கியக் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் டியூஷன் பயிற்சியாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் கணக்கு மற்றும் பொருளாதாரப் பாடங்களுக்கு வகுப்பெடுத்து வருகிறார்.
விசாரணை முதற்கட்டத்தில் இருப்பதால், இந்த விவகாரத்தில் சிபிஎஸ்இ அதிகாரிகள் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து கூற இயலாது. இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. டியூஷன் பயிற்சியாளர்களுக்கு முன்கூட்டியே வினாத்தாள் வந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்று விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.
வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக தில்லியில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகளும் நடைபெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நோயற்ற மனிதன்; போரற்ற உலகம்!
வாய்ப்புகள் வழங்கும் ஒப்பந்தம்!

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

டிவிட்டா் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலா்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


