புதுதில்லி: அரசியல் லாபத்துக்காக எடுக்கப்பட்ட தவறான முடிவு என்று அம்பேத்காரின் பெயரை மாற்றி பிறப்பிக்கப்பட்ட உத்தரபிரதேச அரசின் உத்தரவை அவரது பேரன் பிரகாஷ் அம்பேத்கார் விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் அரசு ஆவணங்களில் இனி அம்பேத்காரின் பெயரை 'ராம்ஜி' அம்பேத்கார் என சேர்க்க வேண்டும் என்று அம்மாநில அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
இந்நாள் வரை டாக்டர் பீம்ராவ் அம்பேத்கார் என்ற குறிப்பிட அவரை இனி டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார் என்றே இனி குறிப்பிட வேண்டும் என உத்தரப்பிரதேச அரசு ஆணை பிறப்பித்துள்ளது. உத்தரப்பிரதேச கவர்னர் ராம் நாயக் பரிந்துரையை ஏற்று, உத்தரப்பிரதேச அரசு அம்பேத்காரின் பெயரை மாற்றி அமைக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் அரசியல் லாபத்துக்காக எடுக்கப்பட்ட தவறான முடிவு என்று அம்பேத்காரின் பெயரை மாற்றி பிறப்பிக்கப்பட்ட உத்தரபிரதேச அரசின் உத்தரவை அவரது பேரன் பிரகாஷ் அம்பேத்கார் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
பாரதிய ஜனதா கட்சியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சேர்ந்து இனி அனைத்து அரசுத் துறைகளிலும், லக்னௌ மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றங்களிலும் அம்பேத்காரின் பெயரை 'ராம்ஜி' அம்பேத்கார் என சேர்க்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
இது பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சேர்ந்து செய்த தவறான முடிவு. அவர்கள் அரசியல் லாபத்திற்காகவே இதனைச் செய்துள்ளார்கள். கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிராவில் அவர் 'பாபாசாகேப்' என்றும், இதர வடமாநிலங்களில் 'பாபா பீம்ராவ்' என்றும்தான் அழைக்கப்படுகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மும்பை போராட்டத்தில் போலீஸ் வாகனத்தைத் தடுத்து நிறுத்திய பெண் யார்?

தங்கம் விலை குறைவு! எவ்வளவு?
கதை அல்ல, நிஜம்! ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 இளம்பெண்கள்!

சிதம்பரத்தில் வரலாற்று நிகழ்ச்சியான திருவாசக எழுத்து ஞான வேள்வி: 1400 சிவனடியார்கள் பங்கேற்பு!
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



