உத்தர பிரதேசத்தில் ரீல்ஸ் விடியோ எடுக்க உதவிய கேமராமேனை 3 சகோதரிகள் சேர்ந்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் சரோஜ் (20), சாவித்ரி (19), சந்தோஷ் (18) ஆகிய மூவரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் விடியோ எடுப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர்கள் எனக் கூறப்படுகிறது. இவர்களின் கேமராமேனாக விகாஸ் என்ற விக்கி இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், விகாஸ் மீது சகோதரிகள் மூவருக்கும் ஈர்ப்பு ஏற்பட்டு, விகாஸையே மூவரும் திருமணம் செய்யவும் முடிவெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, சகோதரிகள் மூவரையும் சாமுண்டா மாதா கோயிலில் வைத்து ஜூலை 17-ல் விகாஸ் திருமணம் செய்து கொண்டதுடன், அதனை விடியோவாக பதிவுசெய்து சமூக ஊடங்களிலும் பதிவிட்டுள்ளார். இந்த திருமண நிகழ்வில் மணமக்களின் இருதரப்பில் இருந்தும் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை.
இதனிடையே, இவர்களின் திருமணத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அயோத்தி மன்னர் தசரதனும் 3 மனைவிகள் கொண்டிருந்ததாக சகோதரிகள் மூவரும் கூறினர்.

ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 இளம்பெண்கள் - விடியோ க்ளிப்
இதுகுறித்து, சகோதரிகள் மூவரும் கூறியதாவது, சிறுவயதிலிருந்தே நாங்கள் மூவரும் ஒன்றாகவே இருக்கிறோம். திருமணம் என்ற ஒன்றால் நாங்கள் பிரிய விரும்பவில்லை. எங்களுக்குத் தனித்தனியாக திருமணம் செய்ய எங்கள் குடும்பத்தினர் ஏற்பாடு செய்ய முயற்சித்தபோது, ஒரே நபரையே திருமணம் செய்ய நாங்கள் முடிவு செய்தோம்.
பண்டைய காலத்தில் மூன்று ராணிகளுடன் தசரதன் என்ற மன்னர் இருந்தார். அதுவும் அவமானமா? என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, திருமணம் குறித்து விகாஸ் கூறியதாவது, சகோதரிகள் மூவரையும் ஒன்றாக வைத்திருக்கவே இந்தத் திருமணத்துக்குச் சம்மதித்தேன். நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையே. நாங்கள் நால்வருமே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான்.
எங்களின் சொந்த விருப்பத்தின்பேரில்தான் திருமணம் செய்து கொண்டோம் என்று விகாஸ் தெரிவித்தார்.
Summary
We could not live apart: Three sisters marry their cameraman in Amroha
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காதல் திருமணம் செய்த இளைஞரைத் தாக்கிய 5 போ் மீது வழக்கு!
நூறு வயதுக்கும் மேல் ஒன்றாக வாழ்ந்த சாதனை சகோதரிகள்!

இடம்பெயா்வு, போலி முகவரிகளால் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் எஸ்ஐஆா் பணியை மேற்கொள்வதில் சிக்கல்
மாமியாரைத் திருமணம் செய்துகொண்ட மருமகன்! தமிழ்நாட்டில் அல்ல, உ.பி.யில்!
விடியோக்கள்

Ravindran duraisamy interview | ராமதாஸ் எடுத்த முடிவு சரியா? | Dr Ramadoss | PMK | Anbumani
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope


