பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

நூறு வயதுக்கும் மேல் ஒன்றாக வாழ்ந்த சாதனை சகோதரிகள்!

பிரேசிலைச் சேர்ந்த ஜுலினா டி டியூஸ் நூன்ஸ், ஜோரைட் டி டியூஸ் மோட்டா, லெவிட்டா டி டியூஸ் நூன்ஸ் ஆகிய மூன்று சகோதரிகள் நூறு வயதைத் தாண்டி ஒன்றாக வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

Published On :12 ஜூலை 2026, 4:15 am IST

பிரேசிலைச் சேர்ந்த ஜுலினா டி டியூஸ் நூன்ஸ், ஜோரைட் டி டியூஸ் மோட்டா, லெவிட்டா டி டியூஸ் நூன்ஸ் ஆகிய மூன்று சகோதரிகள் நூறு வயதைத் தாண்டி ஒன்றாக வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இவர்களின் மொத்த வயது சற்றேறக்குறைய 317 ஆண்டுகள். முதுமைப் பருவத்தில் மூன்று சகோதரிகளும் பாசப் பிணைப்புடன் நீண்ட காலம் வாழ்வதற்குக் காரணம் அவர்களுக்கு இடையிலான பாசப் பிணைப்பாகும்.

மனிதர்களின் நீண்ட ஆயுள் குறித்த ஆய்வில் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் இயாரா சௌசா ரியோ டி ஜெனிரோவுக்கு அண்மையில் சென்று மூவரின் விவரங்களைச் சரிபார்த்துள்ளார். மூத்தவர் லெவிட்டாவுக்கு வயதுநூற்று ஒன்பது. ஜோரைட்டுக்கு வயது நூற்று நான்கு. இளையவரான ஜுலினாவுக்கு நூற்று மூன்று வயதாகிறது.

1917 ஜூன் 7-இல் பிறந்த லெவிட்டா, எட்டு உடன்பிறப்புகளில் இரண்டாவது மூத்தவர். அவரது பெற்றோர் வயல் வேலைக்குச் சென்றபோது, வீட்டை நிர்வகிப்பதிலும் மற்றவர்களைக் கவனிப்பதிலும் இருந்தார். இதனால் அவர் திருமணம் செய்துகொள்ளவோ, வேறு பந்தம் மூலம் குழந்தைகளைப் பெறவோ இல்லை.

மாறாக அவர் தனது வாழ்க்கையைத் தன் குடும்பத்துக்காக அர்ப்பணித்தார். தன் தாயைப் போலவே அவரும் கைவினைப் பொருள், பின்னல், தையல் வேலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இப்போதும் அந்த வேலைகளைத் தொடர்கிறார். அதே சமயம் அவர் 'ரெடே குளோபோ' தொலைக்காட்சியிலும் 12 ஆண்டுகள் பணியாற்றினார்.

1921 நவம்பர் 24-இல் பிறந்த ஜோரைட் தொடக்கப்பள்ளி ஆசிரியராகவும், பின்னர் செவிலியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். அவர் 1950-இல் எனியாஸ் ஆல்வ்ஸ் டா மோட்டா என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, ஐந்து வாரிசுகளைப் பெற்றெடுத்தார்.

1923 மார்ச் 4-இல் பிறந்த ஜுலினா, தனது மூத்த சகோதரி லெவிட்டாவைப் போலவே தையல், எம்பிராய்டரி போன்ற கைவினை வேலைகளில் வாழ்நாள் முழுவதும் ஆர்வம் கொண்டிருந்தார். 1945 ஜூலை

17-இல் திருமணம் செய்துகொண்டார். குடும்பத் தலைவியான இவர், ஆறு குழந்தைகளை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தினார். திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தவுடன் அவர் ரியோ டி ஜெனிரோவுக்குச் சென்று, ஜோரைட்டுடன் வசித்து வந்தார். பின்னர் லெவிட்டாவும் அங்கு வந்து சேர்ந்து வாழத் தொடங்கினார்.

பல ஆண்டுகளாக மூன்று சகோதரிகள் ஒருவருக்கு ஒருவர் பிரிக்க முடியாத அளவுக்குப் பாசப் பிணைப்புடன் மகிழ்ச்சியாக உள்ளனர். வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளின்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவாக துணையாக இருந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.