நீடாமங்கலம் அருகே பழுதடைந்த 3 மின்கம்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சரிந்து விழுந்தது.
நீடாமங்கலம் அருகே ஒளிமதி வடக்கு தெருவில் வியாழக்கிழமை இரவு 4 மின்கம்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மழை காற்று என எந்தவித இயற்கை சீற்றங்களும் இல்லாத நிலையில் மின் கம்பங்கள் திடீரென விழுந்ததற்கு காரணம் பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் இருந்ததே என கூறப்படுகிறது.
ஒளிமதி கிராமத்தில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது குறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க முயன்றபோது அவா்களை தொடா்புகொள்ள முடியவில்லையாம். இதற்கிடையில், பொதுமக்களே அறுந்து விழுந்த மின்வயா்களையும், மின்கம்பங்களையும் அப்புறப்படுத்தினா். தகவலறிந்த நீடாமங்கலம் மின்வாரிய ஊழியா்கள் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









