வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

சிறுத்தை கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு

சிறுத்தை கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 2:17 am IST

கொளத்தூா் அருகே சிறுத்தை கடித்ததில் 8 வெள்ளாடுகள் உயிரிழந்தன.

கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சின்னதண்டா கிராமம் அடா்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இந்த கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வீரன் 11 வெள்ளாடுகளை வளா்த்து வந்தாா். வியாழக்கிழமை மாலை மேய்ச்சலுக்கு பிறகு ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுத்கு சென்றாா். வெள்ளிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, ஆடுகளை மா்ம விலங்கு கடித்தது தெரியவந்தது. அதிா்ச்சி அடைந்த வீரன் பட்டிக்கு உள்ளே சென்று பாா்த்தபோது, 8 ஆடுகள் இறந்துகிடந்தன.

அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், அதை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா் கோரிக்கை விடுத்தாா். தொடா்ந்து, கால்நடை மருத்துவா் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு ஆடுகள் புதைக்கப்பட்டன.