மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பாஜக கூட்டணி இல்லையெனில் நாங்கள் கூடுதலாக 15 தொகுதிகளில் வென்றிருப்போம்: சந்திரபாபு நாயுடு

பிரிவுக்குப் பின்பு பாஜக-வுடன் கூட்டணி அமைக்காவிட்டால் நாங்கள் 15 தொகுதிகளில் கூடுதலாக வென்றிருப்போம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 மார்ச் 2018, 9:44 am

தெலுங்கு தேசம் கட்சியின் 37-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் அக்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் உள்ளிட்ட தொண்டர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

அப்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

ஒன்றுபட்ட ஆந்திராவின் பிரிவுக்குப் பின்னர் பாஜக-வுடனான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் சேராமல் இருந்திருந்தால் தெலுங்கு தேசம் கட்சி கூடுதலாக 15 இடங்களைக் கைப்பற்றி இருக்கும். இருப்பினும் அப்போதைய சூழலில் ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நாங்கள் அந்த கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்தோம்.

ஆனால், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. இதுகுறித்து நாங்கள் கேட்டபோது சிறப்பு அந்தஸ்து முறை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்கள். ஆனால், இன்றும் வடகிழக்கு மாநிலங்கள் அதன் பலனை பெற்று வருகின்றன. அப்படி இருக்கையில் அதை எங்களுக்கு மட்டும் மறுப்பது ஏன்? சிறப்பு அந்தஸ்து என்பது எங்கள் உரிமை. ஆனால், பொய்களைப் பரப்பி மத்திய அரசு அதை எங்களுக்கு மறுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான விவகாரத்தில் மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி மார்ச் 16-ஆம் தேதி வெளியேறியது.

இதையடுத்து தெலுங்கு தேசம் மற்றும் ஆந்திர எதிர்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இவ்விவகாரம் தொடர்பாக தங்களின் உறுப்பினர்கள் ராஜிநாமா செய்வார்கள் என்று அறிவித்துள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களையும் ராஜிநாமா செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.