பெங்களூரு: இந்திய ராணுவத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது என்று கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக அவுரத் என்னும் இடத்தில் தனது இரண்டு நாள் சுற்றுப் பயணத்தினை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழன் அன்று துவக்கினார். அதேசமயம் கலபுரகி எனும் இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
அப்பொழுது இந்திய ராணுவத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.அவர் அந்த கூட்டத்தில் பேசியதாவது:
இந்திய ராணுவத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது. பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள் தீவிரவாத முகாம்கள் மீது ‘துல்லிய தாக்குதல்' நடத்தி நமது ராணுவம், அண்டை நாட்டிற்கு தக்க பாடத்தை புகட்டியது. ஆனால் இதற்கு ஆதாரம் எங்கே என்று காங்கிரஸ் கேட்டது. இதன் மூலம் நமது ராணுவ வீரர்களை காங்கிரஸ் அவமதித்து விட்டது.
துல்லிய தாக்குதலுக்கான ஆதாரத்தை நாங்கள் காங்கிரசுக்கு கொடுக்க வேண்டியது அவசியமா? தாக்குதலுக்கு ராணுவ வீரர்கள் துப்பாக்கியை கையில் எடுத்து செல்கிறார்கள். அவர்கள் கேமராவை எடுத்து செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் எதிர்பார்கிறதா? நமது நாட்டு வீரர்களுக்கு, ராணுவ தலைவர்களுக்கு மற்றும் அமைச்சர்களுக்கு இத்தகைய அவமானத்தை காங்கிரஸ் கட்சி ஏராளமாக செய்துள்ளது
காங்கிரஸ் தலைவருக்கு தேசப்பற்றும், தேசிய கீதத்தின் மீது துளியும் மரியாதையும் இல்லை. வந்தே மாதரம் பாடல் ஒலிக்கும் போது காங்கிரஸ் தலைவர் அமர்ந்திருந்திருந்தார். தேர்தல் வரும்போது மட்டும்தான் தலித்துகள் காங்கிரசாரின் நினைவுக்கு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

15 நாடுகளில் அதிகம் பார்க்கப்படும் படமான கட்டா குஸ்தி - 2?
புறங்கூறிப் பொய்யாக வாழ்வதைவிட இறப்பதே மேல்! எக்ஸ் பதிவில் யாரைச் சொல்கிறார் நிவேதா பெத்துராஜ்?

உதயநிதி ஸ்டாலின் கைது: சேலத்தில் திமுகவினர் சாலை மறியல்!

நீதிக் கதைகள்! கற்பது என்பது கற்பவரின் ஆர்வத்தைப் பொறுத்தது!
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK



