மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

எடியூரப்பா ரௌடித்தனத்தை கட்டவிழ்த்துள்ளார்: கர்நாடக முதல்வர் சித்தராமையா

பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ரௌடித்தனத்தை கட்டவிழ்த்துள்ளதாக கர்நாடக முதல்வர் சி்த்தராமையா, திங்கள்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :7 மே 2018, 6:57 am

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நெருங்கும் வேளையில் அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளிடைய கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ராகுல், அமித்ஷா என இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் அங்கு தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பரஸ்பர குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

அங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2007-ஆம் ஆண்டு கோவா பேரவைத் தேர்தலின்போது அங்கு பிரசாரம் செய்த சோனியா, மஹாதாயி நதியை கர்நாடகத்தில் நுழைய விட மாட்டோம் என்று பிரசாரம் செய்தவர் என்று பேசினார். 

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் நிருபர் கேள்வி எழுப்பினார். அப்போது, உங்களுக்கு அந்த விவகாரம் குறித்து எதுவும் தெரியாது. எனவே வாயை மூடி இருக்கவும். மஹாதாயி நதி விவகாரம் தொடர்பாக பிரதமர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், சோனியா அல்ல என்று பதிலளித்தார். 

மேலம், வாக்குச் சாவடிகளுக்கு வராத வாக்காளர்களின் கை, கால்களை கட்டி தூக்கி கொண்டு வந்து பாஜக-வுக்கு வாக்களிக்க வைக்குமாறு பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, அங்கு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார். இந்த பேச்சின் மூலம் எடியூரப்பா எவ்வளவு பெரிய ரௌடித்தனத்தை கட்டவிழ்த்துள்ளார் என்று சித்தராமையா கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.