மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

கர்நாடகத்தில் முறைகேடான வழியில் வெற்றி பெற காங்கிரஸ் முயற்சி

கர்நாடகத்தில் ஆயிரக்கணக்கான போலி வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸை சாடியுள்ள பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, 'கர்நாடகப் பேரவைத் தேர்தலில்

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தும்கூரில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா.

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

கர்நாடகத்தில் ஆயிரக்கணக்கான போலி வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸை சாடியுள்ள பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, 'கர்நாடகப் பேரவைத் தேர்தலில் முறைகேடான வழியில் வெற்றி பெற காங்கிரஸ் முயற்சிக்கிறது' என்று கூறினார்.
கர்நாடகத்தின் ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதியில் ஆயிரக்கணக்கான போலி வாக்காளர் அட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸும், பாஜகவும் பரஸ்பரம் ஒருவர் மீது மற்றொருவர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸின் ஒவ்வொரு செயல்பாடும் போலியானதுதான். ஏழைகளுக்காக வடிக்கும் கண்ணீர், தங்களது ஆட்சியில் நாடு வளர்ச்சியடைந்ததாக கூறிக் கொள்வது, சமூக நீதியை காப்போம் என்று உறுதி கூறுவது என காங்கிரஸின் அனைத்து செயல்பாடுகளும் போலியானதே.
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் தாங்கள் தோற்கப் போவது காங்கிரஸுக்கு நன்றாகவே தெரியும். தங்களது ஊழலும், அடக்குமுறையும் முடிவுக்கு வரப் போகிறதே என்ற விரக்தியில் அக்கட்சியினர் உள்ளனர்.
எனவே, போலி வாக்காளர்அட்டை தயாரித்தல் போன்ற முறைகேடான, ஜனநாயக விரோத வழிகளின் மூலம் தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களது முயற்சி எதுவும் பலிக்காது. கர்நாடகத்தில் மக்கள் சக்தியே வெல்லும். ஜனநாயகத்தை விரும்பும் அத்தனை வாக்காளர்களும், ஊழல் மற்றும் ஜனநாயக விரோத கட்சியான காங்கிரஸை புறக்கணிக்க வேண்டும் என்றார் அமித் ஷா.
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 
காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் கர்நாடகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.