திருவனந்தபுரம்: கேரளாவில் மாற்று பாலின காதலர்கள் முதன்முறையாக சட்டப்படி திருமணம் செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் இஷான். பெண்ணாகப் பிறந்து பின்னர் மருத்துவ சிகிச்சை மூலமாக ஆணாக மாறியவர். அதே போல் ஆணாகப் பிறந்த சூர்யா தனக்குள் ஏற்பட்ட பெண்மையை உணர்ந்து பெண்ணாக மாறியவர். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அறிமுகமானார்கள்.
ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய இவர்கள் நாட்கள் செல்லச் செல்ல காதலர்களாக மாறியுள்ளனர். சூர்யா தனது மனைவியாக வந்தால், தனது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என எண்ணிய இஷான், தனது காதலை சூர்யாவிடம் தெரிவித்துள்ளார். இதற்கு சூர்யாவும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார்.
இவர்களது முடிவுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து நண்பர்கள் அனைவரது முன்னிலையிலும் இவர்களது திருமணம் வியாழன் அன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது. கேரளாவில் மாற்று பாலின காதலர்கள் முதன்முறையாக சட்டப்படி திருமணம் செய்துகொண்டது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜன்னல் ஓரத்தில்...

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

பத்ம பூஷண் விருது! தனுஷ் - 55 படப்பிடிப்பில் கேக் வெட்டிய நடிகர் மம்மூட்டி!

வெனிசுவேலா நிலநடுக்கம்! 164 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! - இடைக்கால அதிபர் அறிவிப்பு!
விடியோக்கள்

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK



