நடிகர் சூர்யா-ஜோதிகா தீபாவளி வாழ்த்து!
நடிகர் சூர்யா-ஜோதிகா தம்பதியினர் பொதுமக்களுக்கு மற்றும் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ள தீபாவளி வாழ்த்துகள் குறித்து...

நடிகர் சூர்யா-ஜோதிகா தீபாவளி வாழ்த்து! - எக்ஸ்
நடிகர் சூர்யா-ஜோதிகா தம்பதியினர் பொதுமக்களுக்கு மற்றும் ரசிகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை(நவ.8) உற்சாக கொண்டாடி வருகின்றனர். மேலும், இனிப்புகளைப் பறிமாறி தீபாவளி வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சூர்யா, தனது மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகாவுடன் இணைந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில், அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தனது நடிப்பில் உருவாகியுள்ள 'சீன்' திரைப்படத்தைத் திரையரங்குகளில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கண்டு மகிழுமாறும் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரும் அனைத்துப் புதிய திரைப்படங்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சூர்யா-ஜோதிகா தம்பதியினரின் வாழ்த்துகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.
திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர்.
அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், அமைதி, செழிப்பு மற்றும் வெற்றி நிறையட்டும் என்பதே இந்த தீபாவளியின் இனிய வாழ்த்துச் செய்தியாக அமைந்துள்ளது.

மிகுந்த மகிழ்ச்சி
இதனிடையே, மற்றொரு பதிவில், எங்கள் இதயங்கள் நன்றியுணர்வால் நிறைந்துள்ளன! என சூர்யா தெரிவித்துள்ளார்.
மொழிகள் மற்றும் எல்லைகளைக் கடந்து, 'சீன்' திரைப்படத்திற்கு நீங்கள் காட்டிய அன்பும் அரவணைப்பும், எங்களுக்கும் எங்கள் குழுவினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
எங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்தமைக்கு நன்றி.
உங்கள் அன்பு, புதிய எல்லைகளைத் தேடித் தொடர்ந்து பயணிக்க எங்களுக்கு ஊக்கமளிக்கிறது.
என்றென்றும் நன்றியுடன் இருப்போம்!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! என கூறியுள்ளார்.
Diwali wishes from actors Suriya and Jyothika!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


