நடிகர் சூர்யாவும் தீபாவளியும்..!
நடிகர் சூர்யாவின் சீன் தீபாவளிக்கு வெளியாகிறது...

நடிகர் சூர்யா நடிப்பில் தீபாவளி வெளியீடாக இதுவரை 6 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சூர்யா இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவான சீன் திரைப்படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாக வருகிற நவ. 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்களின் தொடர் வெற்றியால் பெரிய எதிர்பார்ப்பு இப்படத்திற்கும் உள்ளது.
இதற்கு முன்பே நடிகர் சூர்யா தீபாவளி வெளியீடாக இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த 2001-ல் நந்தாவும் 2003-ல் பிதாமகனிலும் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். இப்படங்களே அவரை சிறந்த நடிகர் பட்டியலிலும் சேர்த்தது. வணிக ரீதியாகவும் சூர்யாவுக்கு புதிய வெளிச்சத்தைக் கொடுத்தன.

பின், 2007 ஆம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடித்த வேல் திரைப்படத்துடன் வந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து, 2009 ஆம் ஆண்டு இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஆதவன் திரைப்படத்தின் மூலம் அந்தாண்டு தீபாவளி வெளியீடாக வந்தார். நல்ல கமர்சியல் திரைப்படம்தான் என்றாலும் ஹிட்டோடு நின்றுவிட்டது. மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகரவில்லை. ஆனால், உருவாக்க ரீதியாக சிறப்பான பாராட்டுகளைப் பெற்றது.
பின், 2011 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக சூர்யா - ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணியில் பெரிய பொருள்செலவில் உருவான 7 ஆம் அறிவு திரைக்கு வந்தது. இதிலும் சூர்யா இரண்டு தோற்றங்களில் நடித்து அசத்தியிருந்தார். போதி தர்மன், தமிழர்களின் அறிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் தமிழில் ஹிட் ஆனது. தெலுங்கில் எதிர்ப்பார்ப்புக்கு அதிகமான வரவேற்பைப் பெற்றது. இப்படத்திலும் மூலமே சூர்யாவுக்கு தெலுங்கில் ரசிகர்கள் அதிகரித்தனர்.
இறுதியாக, நடிகர் சூர்யாவின் தீபாவளி திரைப்படமாக சூரரைப்போற்று நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய அங்கீகாரத்தையும் வரவேற்பையும் பெற்றது.
இந்த ஆறு திரைப்படங்களும் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்து வெற்றி பெற்றுள்ளன. அதேபோல், இந்த தீபாவளிக்கு வெளியாகும் சீன் திரைப்படமும் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையில் சூர்யா ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சூர்யாவின் தீபாவளி செண்டிமெண்ட் தொடருமா? பார்ப்போம்!
Three films starring actor Suriya have been released during the Diwali festival to date.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


