உ.பி.: ரயில் தடம் புரண்டு விபத்து
உத்தரப் பிரதேச மாநிலம் டரியாபந்த் பகுதியில் பயணிகள் விரைவு ரயில் ஒன்று சனிக்கிழமை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. எனினும், இதனால் அசம்பாவிதமோ, பயணிகளுக்கு காயமோ ஏற்படவில்லை.


உத்தரப் பிரதேச மாநிலம் டரியாபந்த் பகுதியில் பயணிகள் விரைவு ரயில் ஒன்று சனிக்கிழமை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. எனினும், இதனால் அசம்பாவிதமோ, பயணிகளுக்கு காயமோ ஏற்படவில்லை.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறியதாவது:
பாட்னாவிலிருந்து கோடா வரை செல்லும் விரைவு ரயில், சனிக்கிழமை ஃபைஸாபாத் வழியாக லக்னெü நோக்கி சென்றுகொண்டிருந்தது. டரியாபந்த் அருகே வரும்போது தண்டவாளத்தில் மரம் ஒன்று விழுந்து கிடந்ததை ரயில் ஓட்டுநர் கண்டுள்ளார். விபத்தை தவிர்ப்பதற்காக உடனடியாக அவசரகால நிறுத்தும் வசதியை (எமர்ஜென்சி பிரேக்) அவர் பயன்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக ரயில் தடம் புரண்டதால், பயணிகள் தங்களின் இருக்கைகளில் இருந்து கீழே விழுந்தனர். எனினும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு பாராபங்கி மற்றும் லக்னெüவிலிருந்து மீட்பு ரயில்கள் வரவழைக்கப்பட்டு, தடம்புரண்ட ரயில் மீட்கப்பட்டது. பின்னர் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து சீராகியது என்று காவல்துறையினர் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...