சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஓய்வூதிய படிவத்தில் "செல்ஃபி' படத்தை பயன்படுத்தக் கூடாது: மத்திய அரசு

ஓய்வூதிய படிவத்தில் "செல்ஃபி' படத்தை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :14 மே 2018, 6:56 pm

DIN

ஓய்வூதிய படிவத்தில் "செல்ஃபி' படத்தை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெறுவதற்கு 8 மாதங்களுக்கு முன் தலைமை அலுவலகத்தில் இருந்து ஓய்வூதிய படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். அந்த படிவத்தில், தங்களது வாழ்க்கைத் துணையுடன் இருக்கும் படத்தையும் இணைக்க வேண்டும்.
இந்நிலையில், இந்த படிவத்தை நிரப்பும்போது செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது தொடர்பான புதிய அறிவுறுத்தல்களை மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செல்லிடப்பேசியில் எடுக்கப்படும் "செல்ஃபி' படத்தை, ஓய்வூதிய படிவத்தில் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கண்ணாடி அணிந்த படத்தையோ, நெற்றியை மறைக்கும் அளவுக்கு முடியுடன் இருப்பது போன்ற படங்களையோ பயன்படுத்தக் கூடாது; கறுப்பு - வெள்ளை படத்தை பயன்படுத்தக் கூடாது. படிவத்தில் குறிப்பிடப்பட்ட அளவுக்கு படமும் கையெழுத்தும் இருக்க வேண்டும். 
ஓய்வூதிய படிவத்துக்கு ஒப்புதல் அளிப்பதில் எந்த கால தாமதமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 61.17 லட்சம் ஓய்வூதியர்களும் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.