கடந்த 4 ஆண்டுகளில் விளம்பரத்துக்காக ரூ.4,343 கோடியை மத்திய அரசு செலவிட்டிருப்பது தெரியவந்துள்ளது. செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள் ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட விளம்பரங்கள் அதில் பிரதானமாக உள்ளன. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் இந்தப் புள்ளி விவரங்களை மத்திய செய்தி - ஒலிபரப்புத் துறை வெளியிட்டுள்ளது.
மத்திய பாஜக அரசும், பிரதமர் மோடியும் சுய விளம்பரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தத் தகவல்கள் அக்கட்சிகளின் வாதத்துக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளன.
கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியமைத்ததில் இருந்து தற்போது வரை அரசு விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை எவ்வளவு? எனக் கேட்டு மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அனில் கல்கலி என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார்.
மத்திய செய்தி - ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் "அவுட்ரீச் கம்யூனிகேஷன்' பிரிவு அதற்கு பதிலளித்துள்ளது. அப்பிரிவின் நிதி ஆலோசகர் தபன் சுத்ராதர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மத்திய அரசின் விளம்பரங்கள் பொதுவாக அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் மற்றும் புறவெளி ஊடகங்களில் (அவுட்டோர்) வெளியிடப்படுகிறது. அதன்படி, நாளிதழ், மாத, வார இதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களிலும், தொலைக்காட்சி சேனல்கள், வானொலி, இணையதளம், குறுஞ்செய்தி சேவை, திரையரங்குகள் உள்ளிட்ட காட்சி ஊடகங்களிலும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
பதாகைகள், சுவரொட்டிகள், மின்னணு காட்சிப் பலகைகள், ரயில் டிக்கெட்டுகள் உள்ளிட்ட புறவெளி ஊடகங்களிலும் அரசின் திட்டங்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மத்திய அரசு ரூ.4,343 கோடியை விளம்பரத்துக்காக செலவிட்டுள்ளது.
அதில் அச்சு ஊடகங்களில் விளம்பரம் செய்ய ரூ.1,732 கோடியும், காட்சி ஊடங்களுக்கு ரூ.2,079 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. அதேபோன்று ரூ.531 கோடிக்கு புறவெளி விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன என்று அந்தப் பதிலில் தபன் சுத்ராகர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

