போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சபரிமலை கோயில் தந்திரி மறைவு

சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி கண்டரரூ மகேஷ்வரரூ (91) வயோதிகம் காரணமாக திங்கள்கிழமை காலமானார். அவருக்கு மனைவி, மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.

Updated On :14 மே 2018, 8:22 pm

சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி கண்டரரூ மகேஷ்வரரூ (91) வயோதிகம் காரணமாக திங்கள்கிழமை காலமானார். அவருக்கு மனைவி, மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.
சபரிமலை கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்வதற்கான அதிகாரம் கொண்ட தழமொன் குடும்பத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வரரூ என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலம், செங்கன்னூரைச் சேர்ந்த அவர், சிறு வயது முதலே சபரிமலை கோயிலில் தந்திரியாக இருந்து வந்தார். 
சபரிமலையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலுக்கும் 2006- ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தந்திரியாக இருந்துள்ளார்.
சில காலமாகவே மகேஷ்வரரூ உடல் நலிவுற்று ஓய்வில் இருந்தார். இந்தச் சூழலில், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மகேஷ்வரரூ, திங்கள்கிழமை காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் செங்கன்னூரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.