போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பிகாரில் சாலை விபத்து: 3 ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர்கள் பலி

பிகாரில் நடந்த சாலை விபத்தில் 3 ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர்கள் உட்பட 4 பேர் பலியாகினர்.

News image
Updated On :14 மே 2018, 3:26 am

பிகாரில் நடந்த சாலை விபத்தில் 3 ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர்கள் உட்பட 4 பேர் பலியாகினர்.

ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ்பிரதாப் யாதவுக்கும், பிகார் எம்எல்ஏ சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது. 

பிகார் தலைநகர் பாட்னாவில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண விழாவில், அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் குடும்ப சகிதமாக கலந்துகொண்டனர். 

இத்திருமண நிகழ்சசியில் பங்கேற்ற ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் காரில் நேற்று கிஷன்கன்ஞ் பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற கார் ஆராரியா மாவட்டத்தில் வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர்கள் உட்பட 4 பேர் பலியாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.