மேற்கு வங்க மாநிலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இதில் 12 பேர் உயிரிழந்தனர்; 43 பேர் காயமடைந்தனர்.
மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கட்சியினர், மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக அஸ்ஸாம், ஒடிஸா, சிக்கிம் மற்றும் ஆந்திரத்தில் இருந்து 1,500 பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இது தவிர மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 46 ஆயிரம் போலீஸாரும், கொல்கத்தா மாநகர போலீஸார் 12 ஆயிரம் பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
73 சதவீத வாக்குப் பதிவு: பல்வேறு கட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. ஏற்கெனவே, வேட்புமனு தாக்கலின்போது வன்முறை ஏற்பட்டதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. 20 மாவட்டங்களில் உள்ள 612 ஜில்லா பஞ்சாயத்து, 6,157 தாலுகா பஞ்சாயத்து, 31,827 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 73 சதவீத வாக்குகள் பதிவாயின. வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
பாஜக தொண்டர் சுட்டுக் கொலை: வடக்கு 24 பர்கானாக்கள், நாடியா, முர்ஷிதாபாத், தெற்கு தினஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்தது. முர்ஷிதாபாத்தின் சுஜாபூர் கிராமத்தில் வாக்குச் சாவடி அருகே ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் என்று உள்ளூர் பாஜக தலைவர் கூறியுள்ளார்.
வெடிகுண்டு வீச்சு: தெற்கு தினஜ்பூரில் காவல் நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர் கொல்லப்பட்டார். 4 பேர் படுகாயமடைந்தனர். நாடியா மாவட்டத்தின் நக்ஸிபாரா பகுதியில் வாக்குப் பதிவின்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பினரும் கையில் கிடைத்த பொருள்களை எடுத்து மற்றொரு தரப்பை தாக்கினர். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்டோர் காயடைந்தனர். சாந்திபூர் பகுதியில் ஏற்பட்ட தேர்தல் வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார்.
அறைவிட்ட அமைச்சர்: கூச் பிகார் மாவட்டத்தில் மாநில அமைச்சர் ரவீந்திரநாத் கோஷ் வாக்குப் பதிவை பார்வையிட்டார். அப்போது, வாக்குச் சாவடிக்கு எதிரே ஆளும் கட்சிக்கு எதிராக கோஷமிட்ட ஒருவரின் கன்னத்தில் அமைச்சர் அறைந்தார். இந்த சம்பவம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. எனினும், தன்மீதான குற்றச்சாட்டை அமைச்சர் கோஷ் மறுத்துள்ளார்.
வாக்குச் சாவடியில் வன்முறை: கிழக்கு மிதுனபுரி மாவட்டத்தில் ஒரு வாக்குச் சாவடியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸூக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வாக்காளர்கள் உள்பட 15 பேர் காயமடைந்தனர். அங்கு சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மீது மிளகாய் பொடியைத் தூவி சிலர் தாக்குதல் நடத்தினர். வடக்கு மிதுனபுரியில் ஒரு வாக்குச்சாவடிக்கு வெளியே மர்ம நபர்கள் 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதையடுத்து, அங்கு வாக்களிக்கக் கூடியிருந்த பொதுமக்கள் சிதறி ஒடினர். இதில் எவருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இதே பகுதியில் ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த 3 நாட்டு வெடிகுண்டுகளை ரயில்வே போலீஸார் கண்டுபிடித்து அகற்றினர். தேர்தல் வன்முறையில் மொத்தம் 12 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill

பணப்பட்டுவாடா புகாா்: பாஜக, அதிமுக நிா்வாகிகளிடம் போலீஸாா் விசாரணை

ஈரான் போர்: 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான்!

பிரமிக்கத்தக்கக் கூடிய கேட்ச்..! தன்னையே பாராட்டிக்கொண்ட ஸ்ரேயாஷ்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


