பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

பிரமிக்கத்தக்கக் கூடிய கேட்ச்..! தன்னையே பாராட்டிக்கொண்ட ஸ்ரேயாஷ்!

பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் தனது கேட்ச் குறித்து பேசியிருப்பதாவது...

News image

ஸ்ரேயாஷ் கேட்ச்சும் அதன் கொண்டாட்டங்களும். - படங்கள்: ஐபிஎல், பஞ்சாப் கிங்ஸ்.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:15 pm IST

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஃபீல்டிங்கில் தனது அபாரமான கேட்ச்சினால் ஆட்டத்தில் மாற்றம் கண்டது என்றும் அந்தக் கேட்சிற்காக தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதாகவும் பேசியிருப்பது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.

நேற்றிரவு வான்கடேவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 195/6 ரன்கள் எடுக்க, பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 198/3 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் 17.3ஆவது பந்தில் மார்கோ யான்சென் வீசிய பந்தை ஹார்திக் பாண்டியா அடிக்க, எல்லைக் கோட்டில் நின்றிருந்த ஸ்ரேயாஷ் லாவகமாக தாவிப் பிடித்து, எல்லைக் கோட்டை தாண்டும்போது அருகில் நின்றிருந்த சேவியர் பிராட்லெட்டிடம் வீசுவார். அவரும் அதனைத் தவறவிடாமல் பிடித்துவிடுவார்.

எல்லைக்கோட்டுக்கு அருகில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் ஓய்வறையில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் வாயடைத்துப் பார்ப்பார்கள். இந்தக் கேட்ச் இந்த சீசனில் சிறந்தது எனப் பலரும் கூறிவருகிறார்கள்.

இது குறித்து ஸ்ரேயாஷ், “எனது கேட்ச்தான் மும்பையை அதிக ரன்கள் கொடுக்கவிடாமல் தடுத்தது (சிரிக்கிறார்). இல்லை, எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்” என்றார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியிட்ட மற்றுமொரு விடியோவில் ஸ்ரேயாஸ், “எனது கேட்ச் மிகவும் பிரமிக்கத்தக்கது. யாருமே எனக்கு பாராட்டு தெரிவிக்காவிட்டாலும் நானே எனது தோளைத் தட்டிக்கொள்வேன்” என்றார். இவரது ஃபீடிங்கும் தன்னம்பிக்கையும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Summary

A Stunning Catch in ipl 2026 against Mumbai Indians ! Shreyas Applauds Himself!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.