வாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து: 16 பேர் பலி 

வாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து: 16 பேர் பலி 

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கட்டபப்ட்டுக் கொண்டிருந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகியுள்ளனர்.
Published on

வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கட்டபப்ட்டுக் கொண்டிருந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகியுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் மேம்பாலம் ஒன்று அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் செவ்வாயன்று மேம்பாலத்தின் ஒரு பகுதி எதிர்பாராமல் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. விபத்து பற்றிய தகவல் கேள்விப்பட்டதும் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர்.

பொதுமக்களுடன் இணைந்து விபத்து நேரிட்ட பகுதியில் மீட்பு படையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரையில் 16 பேர் உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. அத்துடன் இடிபாடுகளுக்குள் 50-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விபத்திற்கு உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யந்தாத் வருத்தம் தெரிவித்து உள்ளார். தேவையான உதவிகளை செய்யும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் உத்தரவிட்டு உள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துளளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com