பாஜக-வுடன் கூட்டணி இல்லை: மஜத தலைவர் குமாரசாமி திட்டவட்டம்

இந்த கூட்டத்தில் 4 எம்எல்ஏ-க்கள் பங்கேற்கவில்லை எனவும், 4எம்எல்ஏ-க்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.
பாஜக-வுடன் கூட்டணி இல்லை: மஜத தலைவர் குமாரசாமி திட்டவட்டம்

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் பெங்களூருவில் குமாரசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. எம்எல்ஏ-க்கள் கூட்டத்துக்கு பின் அடுத்தக்கட்ட முடிவு குறித்து செய்தியாளர்களிடம் குமாரசாமி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாஜக-வுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையல், பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 52 எம்எல்ஏ-க்கள் பங்கேற்றுள்ளதாகவும், 26 எம்எல்ஏ-க்கள் வந்துகொண்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இருப்பினும் இந்த கூட்டத்தில் 4 எம்எல்ஏ-க்கள் பங்கேற்கவில்லை எனவும், 4 எம்எல்ஏ-க்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com