ராய்ப்பூர்: இந்திய சட்டத்துறையின் நிலைமை பாகிஸ்தானைப் போலாகி விட்டது என்று காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற பொதுமக்கள் சுயராஜ்யம் தொடர்பான மாநாடு ஒன்றில் பேசிய அவர், அப்பொழுது கூறியதாவது:
நமது அரசியல் அமைப்புச் சட்டம் தற்பொழுது கடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. பொதுவாக மக்கள்தான் தங்கள் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள உச்ச நீதிமன்றத்தினை நாடுவார்கள். ஆனால் நாடு சுதநதிரம் பெற்ற 70 ஆண்டுகளில் முதன்முறையாக நீதிபதிகள் மக்களை நாடி வருகிறார்கள்.
செய்தியாளர் சந்திப்பில் தாங்கள் மிரட்டப்படுவதாக கூறுகிறார்கள். தங்கள் பணியினைச் செய்ய இயலாமல் தடுக்கப்படுவதாக கூறுகிறார்கள். பொதுவாக இத்தகைய சம்பவங்கள் சர்வாதிகார நாடுகளில்தான் நடக்கும். இது முன்னர் ஆப்பிரிக்காவில், பாகிஸ்தானில் நடந்துள்ளது. தற்பொழுது முதன்முறையாக நமது நாட்டிலும் நடந்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுதந்திர நாள்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!

முந்தைய ஆட்சிகளில் கொண்டுவந்த பயனுள்ள திட்டங்கள் தொடரும்: முதல்வர் விஜய் சுதந்திர நாள் உரை!

சுதந்திர நாள்: மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சுதந்திர நாள் விழா: ஸ்ரீநடராஜர் கோயில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது!
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



