கர்நாடக தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் அமைச்சர்களின் பட்டியல்

கடந்த காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த 18 பேர் (முதல்வர் சித்தராமையா உட்பட) இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.
கர்நாடக தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் அமைச்சர்களின் பட்டியல்

கர்நாடகத்தில் மே 12-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து மே 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 78 மற்றும் மஜத 38 இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து அங்கு மே 17-ஆம் தேதி பாஜக ஆட்சி அமைத்தது. முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்.

இந்நிலையில், கடந்த காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த 18 பேர் (முதல்வர் சித்தராமையா உட்பட) இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். அவர்களின் விவரம் பின்வருமாறு:

  • சித்தராமையா - முதல்வர்
  • ஹெச்.சி.மஹாதேவப்பா - பொதுப்பணித்துறை அமைச்சர்
  • ராம்நாத் ராய் - வனத்துறை அமைச்சர்
  • ஹெச்.ஆஞ்சநேயா - சமூக நலத்துறை அமைச்சர்
  • டாக்டர் எஸ்.பி.பாடீல் - மருத்துவக் கல்வித்துறை அமைச்சர்
  • எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன் - தொல்பொருள்துறை அமைச்சர்
  • காகோடு திம்மப்பா - வருவாய்த்துறை அமைச்சர்
  • பாசவராஜ் ராயரெட்டி - உயர் கல்வித்துறை அமைச்சர்
  • பிரமோத் மாதவ்ராஜ் - மீன்வளம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
  • ஹெச்.எம்.ரெவன்னா - போக்குவரத்துத்துறை அமைச்சர்
  • டி.பி.ஜெயசந்திரா - சட்டத்துறை அமைச்சர்
  • ஏ.மஞ்சு - கால்நடைத்துறை அமைச்சர்
  • ருத்ரப்பா லாமானி - பட்டு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்
  • ஷிவராஜ் டாங்காடாகி - வேளாண்துறை அமைச்சர்
  • சந்தோஷ் லாட் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
  • உமாஸ்ரீ - கன்னட கலாச்சாரத்துறை அமைச்சர்
  • மோகன் குமாரி - சர்க்கரை உற்பத்தித்துறை அமைச்சர்
  • கே.பி.கோலிவாட் - கர்நாடக சட்டப் பேரவைத் தலைவர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com