பெங்களூரு: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏவுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேரம் பேசும் புதிய ஆடியோ வெளியானதால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதை எதிர்த்து காங்கிரஸ், மஜத. கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பை சனிக்கிழமையன்று நடத்த உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை சட்டமன்றக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏவுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேரம் பேசும் புதிய ஆடியோ வெளியானதால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொச்சி நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது காங்கிரஸ் எம்.எல்.ஏ பாட்டீலுடன் முதல்வர் எடியூரப்பா பேசுவது போன்ற ஆடியோவை காங்கிரஸ் தற்பொழுது வெளியிட்டுள்ளது.
அந்த ஆடியோவில் பாட்டீலுக்கு அமைச்சர் பதவியுடன் நீங்கள் கேட்டதை தருகிறோம் என்று எடியூரப்பா உறுதி கூறுகிறார். அத்துடன் மேலும் 3 பேரை அழைத்து வாருங்கள் என்றும் அவர் கூறுகிறார். இந்த ஆடியோவின் காரணமாக கர்நாடக அரசியல் சூழல் மேலும் சூடு பிடித்துள்ளது.
முன்னதாக ராய்ச்சூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் பாஜக தலைவர் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசும் ஆடியோவானது வெள்ளியன்று வெளியானது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து நகை வெள்ளி பொருள்கள் திருட்டு

காரைக்காலில் நாய்க்கடியால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரிப்பு - மக்கள் வேதனை
பைக் மோதிய தகராறில் சிறுவன் உள்பட இருவா் மீது தாக்குதல்: 2 போ் கைது

தோ்வு மன அழுத்தம்: மாணவி தற்கொலை
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

