மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ராஜீவ் காந்தி நினைவு தினம்: ராகுல் காந்தி டுவீட்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 127-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி டுவிட்டரில் டுவீட் செய்துள்ளார். 

News image
Updated On :21 மே 2018, 4:29 am

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தில்லியில் உள்ள வீர் பூமியில் அவரது நினைவு இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

இந்த நினைவு தினத்தை முன்னிட்டு, ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தந்தை ராஜீவ் காந்தி குறித்து டுவீட் செய்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, 

"வெறுப்பை சுமந்து செல்பவர்களுக்கு தான் அது சிறை என்று எனது தந்தை எனக்கு கற்றுத்தந்துள்ளார். எனக்கு கற்றுத் தந்த அன்பு, அனைவரையும் மதிப்பது என தந்தையாக ஒரு மகனுக்கு அவர் வழங்கிய விலைமதிப்பற்ற பரிசுகளுக்காக அவருடைய இன்றைய நினைவு தினத்தில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

உங்களை (ராஜீவ் காந்தி) விரும்பும் அனைவரும் உங்களை எப்போதும் இதயத்திலேயே வைத்திருப்போம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.