முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவருக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் திங்கள்
கிழமை மரியாதை செலுத்தினர்.
தில்லியில் ராஜீவ் காந்தி நினைவிடம் அமைந்துள்ள வீர பூமியில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோர்
மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுடன் முன்னாள்
பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஷீலா தீட்சித், அசோக் கெலாட், சுஷில் குமார் ஷிண்டே, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
ராஜீவ் காந்தியின் நினைவாக, ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ""ஒவ்வொருவரையும் எப்படி நேசிக்க வேண்டும்? எப்படி மதிக்க வேண்டும் என்று எனது தந்தை (ராஜீவ் காந்தி) எனக்கு கற்றுக் கொடுத்தார்; இதுவே ஒரு மகனுக்கு ஒரு தந்தை கொடுக்கக் கூடிய மதிப்புமிக்க பரிசாக இருக்க முடியும்; அதற்காக, எனது தந்தைக்கு அவருடைய நினைவு நாளில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியும் தனது சுட்டுரைப் பக்கம் மூலமாக, ராஜீவ் காந்திக்கு நினைவஞ்சலி செய்தியை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய் சிங், பி.எல்.புனியா, ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, சஞ்சய் நிருபம், பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோரும் சமூக வலைதளப் பக்கங்களில், ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.
ராஜீவ் காந்தி, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புறநகர் சென்னையை மிரட்டும் கோடை வெய்யில்! இது வெறும் ஆரம்பம்தானா?

தங்கம், வெள்ளி விலை உயர்வு: எவ்வளவு?

அனிஷ்மா, ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகும் ’மொத ராத்திரி’ திரைப்படம்!
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வேலைநிறுத்தம்! படப்பிடிப்புகள் ரத்து
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


