நிபா வைரஸ் எதிரொலி: பழங்களைப் பார்த்து பயப்படும் மக்கள்; கவலையில் வியாபாரிகள்

கேரளாவையே உலுக்கியிருக்கும் நிபா வைரஸ் தாக்கத்தால் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் எதிரொலி: பழங்களைப் பார்த்து பயப்படும் மக்கள்; கவலையில் வியாபாரிகள்
Updated on
1 min read


கேரளாவையே உலுக்கியிருக்கும் நிபா வைரஸ் தாக்கத்தால் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் பரவுவதை தடுக்க 6 மருத்துவர்கள் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வௌவால்களின் எச்சம், சிறுநீர் மூலமாக நிபா வைரஸ் பரவுவதாகவும், வௌவால்கள் கடித்த பழங்களை சாப்பிடுவதன் மூலமும் மனிதர்களுக்கு இந்த நோய் பரவலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

தற்போது எந்த பழத்துக்கான சீசன் என்று அறிந்து அதனை வாங்கி சாப்பிடும் மக்கள், நிபா வைரஸ் தாக்கத்தால் பழங்களை வாங்கவே ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கேரளாவில் இருக்கும் ஏராளமான பழ வியாபாரிகள், கடந்த சில நாட்களாக பழங்களை வாங்க பொதுமக்கள் வராதது குறித்து தங்களது கவலையை தெரிவித்துள்ளனர்.

மற்றொரு பழ வியாபாரி கூறுகையில், வௌவால்கள் விரும்பி சாப்பிடும் மாம்பழம், கொய்யா போன்ற பழங்கள்தான் விற்பனையாகவில்லையே தவிர, ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, மொசாம்பி, வாழைப்பழம் போன்றவை வழக்கம் போல விற்பனையாகி வருவதாகக் கூறுகிறார்.

இது குறித்து பெண் ஒருவர் கூறுவது என்னவென்றால், சில நாட்களுக்கு பழங்களை சாப்பிட வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு பழத்தையும் ஏதேனும் கடிபட்டிருக்கிறதா என்று பரிசோதித்து பார்க்க முடியுமா? என்கிறார்.

எந்த பழத்தையும் பார்த்து வாங்கி சாப்பிடலாம். மூட்டை மூட்டையாகவா வாங்கப் போகிறோம். வாழைப்பழம், மாம்பழம் போன்றவற்றை எளிதாகவே சோதித்துப் பார்க்கலாம். அதனால், பழங்களை வாங்குவதை தவிர்க்கவில்லை என்கிறார் மற்றொரு நபர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com