கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

விராட் கோலிக்கு மட்டுமா?  இதோ எனது சவாலும்: மோடிக்கு எதிராக சீறும் ராகுல் 

விராட் கோலி விடுத்த உடல்தகுதி சவாலை மட்டும் அல்ல; எனது சவாலையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடிக்கு எதிராக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவிப்பு செய்துள்ளார்.

News image
Updated On :24 மே 2018, 11:51 am

புதுதில்லி: விராட் கோலி விடுத்த உடல்தகுதி சவாலை மட்டும் அல்ல; எனது சவாலையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடிக்கு எதிராக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவிப்பு செய்துள்ளார்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்தியர்களின் உடற்தகுதி மந்திரத்தை செயல்படுத்தி அதனை விடியோ மூலம் சமூகவலைதளங்களில் பதிவிடுமாறு கோரிக்கை வைத்திருந்தார்.

இதையடுத்து, அவர் உடற்தகுதி சவாலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்மிண்டன் விராங்கனை சாய்னா நேவால் மற்றும் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோரை பங்கேற்க செவ்வாய்கிழமை பரிந்துரை செய்தார். 

அதையேற்ற கோலி தான் உடற்பயிற்சி செய்யும் விடியோவினை காட்சிப்படுத்தி, புதன்கிழமை ட்விட்டரில் பதிவிட்டார். அந்த பதிவில் பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் மனைவி அனுஷ்கா ஆகியோருக்கு உடற்தகுதி சவாலை விடுப்பதாகவும் கோலி குறிப்பிட்டிருந்தார். 

இந்த சவாலை ஏற்றுக்கொள்வதாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, விராட்! உடற்தகுதி சவாலுக்கான விடியோவை நான் விரைவில் பகிர்கிறேன்"

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விராட் கோலி விடுத்த உடல்தகுதி சவாலை மட்டும் அல்ல; எனது சவாலையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடிக்கு எதிராக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவிப்பு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

அன்புள்ள பிரதமருக்கு, விராட் கோலியின் உடற்தகுதி சவாலை நீங்கள் ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. . இதோ என்னிடமிருந்தும் உங்களுக்கு ஒரு சவால். பெட்ரோல், டீசல் விலையைக் குறையுங்கள். இல்லாவிட்டால், காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தும். நிறைவேற்றச் சொல்லி உங்களுக்கு அழுத்தம் கொடுக்கும். உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.