வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

வாடிக்கையாளர்களின் விவரங்களை 3-ஆம் நபரிடம் பகிரவில்லை: பேடிஎம் விளக்கம்

இந்திய வாடிக்கையாளர்களின் தனிநபர் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக பேடிஎம் நிறுவனம் சனிக்கிழமை விளக்கமளித்துள்ளது.

News image
Updated On :26 மே 2018, 12:43 pm

இந்திய வாடிக்கையாளர்களின் தனிநபர் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக பேடிஎம் நிறுவனம் சனிக்கிழமை விளக்கமளித்துள்ளது.

டிஜிட்டல் முறை பணப்பரிவர்தனைகளுக்கு பேடிஎம் செயலி மிகப் பிரபலமானது. இதன்மூலம் சாதாரண முதல் பெரிய நிறுவனங்கள், வங்கிகள் வரையில் பணப்பரிவர்தனை செய்ய முடியும். இந்நிலையில், தங்களிடம் உள்ள தனிநபர் வாடிக்கையாளர்கள் விவரங்களை இந்நிறுவனம் 3-ஆம் நபரிடம் பகிர்ந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து பேடிஎம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டதாவது:

எங்களுடைய வாடிக்கையாளர்களின் தனிநபர் விவரங்களை நாங்கள் 3-ஆம் நபரிடம் பகிர்ந்துவிட்டதாக விடியோக்கள் வெளியாகியுள்ளன. இது முற்றிலும் பொய் மற்றும் தவறான தகவலாகும். பேடிஎம் நிறுவனத்தைப் பொருத்தவரையில் உங்கள் விவரங்கள் உங்களிடம் தான் இருக்கும். அவை எங்களிடமோ, 3-ஆம் நபரிடமோ, அரசிடமோ இல்லை.

எங்களுடைய சட்டதிட்டங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட விசாரணைகளுக்கு மட்டுமே உங்களுடைய தகவல்கள் சட்டத்துறையிடம் வழங்கப்படும். மற்றபடி உங்களின் விவரங்களை பகிருமாறு நீங்கள் எந்த இடத்திலும் எங்களிடம் அனுமதி வழங்கவில்லை. இதுவே வாடிக்கையாளர்களுக்கும், எங்களுக்கும் இடையிலான நம்பிக்கை.

இதுபோன்ற தவறான வதந்திகளைப் பரப்புவோர் பேடிஎம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரோ அல்லது அதன் ஊழியரோ கிடையாது. அவர்களுக்கு எங்கள் சட்டதிட்டங்கள் தெரியாது. இந்தியாவில் பேடிஎம் நிறுவனத்தில் இணைந்துள்ள 300 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்களும் பாதுகாப்பாக உள்ளது என்று
தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.