யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வெளிநாடு செல்வதற்கு முன் பாஜகவுக்கு ராகுல் காந்தி ட்வீட்!

சோனியா காந்தியின் சிகிச்சைக்காக சிறிது நாட்கள் இந்தியாவில் இருக்க மாட்டேன் என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

News image
Updated On :28 மே 2018, 5:47 am

DIN

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் வருடாந்திர சிகிச்சை காரணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அவருடன் வெளிநாடு பயணிக்கிறார். இதற்கு முன்பாக ராகுல் காந்தி ட்விட்டரில் பாஜகவினருக்கு ட்விட்டர் மூலம் ஒரு செய்தி தெரிவித்து சென்றார். அந்த ட்வீட்டில் அவர் கூறியதாவது, 

"சோனியா காந்தியின் வருடாந்திர மருத்துவ சிகிச்சைக்காக அவருடன் வெளிநாடு செல்வதால் சிறிது நாட்கள் இந்தியாவில் இருக்க மாட்டேன். 

பாஜகவின் சமூகவலைதள ட்ரால் நண்பர்களுக்கு: நிறைய வேலைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். நான் விரைவில் திரும்பி விடுவேன்" என்றார்.    

ராகுல் காந்தியின் இந்த ட்வீட்டுக்கு பாஜகவின் ட்விட்டர் பக்கம் பதில் தந்துள்ளது. 

அதில் கூறியதாவது,

"சோனியாவின் உடல் ஆரோக்கியம் நலம் பெற வாழ்த்துகிறோம். கர்நாடகாவில் அமைச்சரவை அமைந்து அரசு செயல்பட காத்திருக்கிறது. நீங்கள் கிளம்புவதற்கு முன் கர்நாடகாவில் அரசு செயல்பட உங்களால் உறுதியளிக்க முடியுமா?

சமூக வலைதளங்களில் இருக்கும் அனைவரும் நீங்கள் அங்கிருந்தாலும் எப்போதும் எங்களை மகிழ்விப்பீர் என்று எதிர்பார்கின்றனர்." என்று பதிவேற்றப்பட்டிருந்தது. 

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி ஆட்சியில் அமைச்சரவை குறித்தான பேச்சு இன்னும் இழுபறியிலேயே உள்ளது. இதை குறிப்பிட்டு தான் பாஜக ராகுலிடம் அந்த கேள்வியை எழுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.