செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ராகுல் நிபா வைரஸ் போன்றவர்: ஹரியாணா அமைச்சர் விமர்சனம்

காங்கிரஸ் தலைவர் ராகுல், நிபா வைரஸ் போன்றவர் என ஹரியாணா அமைச்சர் அனில் விஜ் செவ்வாய்கிழமை விமர்சித்துள்ளார்.

News image
Updated On :29 மே 2018, 1:58 pm

காங்கிரஸ் தலைவர் ராகுல், நிபா வைரஸ் போன்றவர் என ஹரியாணா அமைச்சர் அனில் விஜ் செவ்வாய்கிழமை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஹரியாணா அமைச்சர் அனில் விஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் தலைவர் ராகுல், நிபா வைரஸ் போன்றவர். அவர் எந்தக் கட்சியுடன் சேர்ந்தாலும் அதை அழித்துவிடுவார். வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைய திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அத்தனை பேரும் இதில் காணாமல் போவார்கள் என்றார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவராக ராகுல் பதவியேற்றதன் மூலம், காங்கிரஸ் இல்லா பாரதத்தை ஏற்படுத்தும் பணியை பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் சுலபமாக்கியுள்ளார். இதை நான் வரவேற்கிறேன் என்று அமைச்சர் அனில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.