விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக விவசாயிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் முதல்வராகப் பதவியேற்ற பாஜக தலைவர் எடியூரப்பா, விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல் கையெழுத்திட்டார். பின்னர் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் ஆதரவுடன் மஜத கட்சித் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார். அப்போது 24 மணிநேரங்களுக்குள்ளாக கடன் தள்ளுபடி நிறைவேற்றப்படும் என்றார்.
மேலும் தான் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே கடன்பட்டுள்ளதாகவும், கர்நாடக மக்களுக்கு அல்ல என்று பேட்டியளித்தார். இதனிடையே விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரம் தொடர்பாக எடியூரப்பா கேள்வி எழுப்பினார். அதுபோல மாநிலம் தழுவிய அளவில் பாஜக போராட்டம் நடத்தியது.
அதுபோல பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதல்வர் குமாரசாமி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் குமாரசாமி தெரிவித்ததாவது:
பதவியேற்ற 24 மணி நேரத்தில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வேன் என்று உறுதியளித்தேன். ஆனால் தற்போது நான் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளேன். எனவே எனக்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது. அவ்வாறு நான் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என்றால் முதல்வர் பதவியில் இருந்து விலகுவது மட்டுமல்லாமல் அரசியலில் இருந்தே வெளியேறுகிறேன் என்றார்.
இந்நிலையில், விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான வழிகாட்டுதல்களை புதன்கிழமை வெளியிடுவதுடன், கர்நாடக சட்டப் பேரவை வளாகத்தில் காலை 11 மணியளவில் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் முதல்வர் குமாரசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


