நாளை நடைதிறப்பு: சபரிமலையில்  பாதுகாப்புக்காக 2300 போலீசார் குவிப்பு 

நாளை நடைதிறப்பு: சபரிமலையில்  பாதுகாப்புக்காக 2300 போலீசார் குவிப்பு 

சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக திங்களன்று ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ள நிலையில், பாதுகாப்புக்காக 2300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  
Published on

திருவனந்தபுரம்: சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக திங்களன்று ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ள நிலையில், பாதுகாப்புக்காக 2300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதித்து உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முயற்சி செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், பல்வேறு ஹிந்து அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், ஐயப்பன் கோயிலின் நடை கடந்த மாதம் மாதாந்திர பூஜைக்காக திறக்கப்பட்டது. அப்போது கோயிலில் 50 வயதுக்கு உள்பட்ட பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையும் மீறி வந்த பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் என சில பெண்களை, பக்தர்கள் பாதி வழியில் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர்களை போலீஸார் பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்தனர். பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவமும், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவங்களும் நடந்தது. அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 2000-க்கும்மேற்பட்டவர்களை போலீஸ் கைது செய்தது. 

இந்நிலையில் சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக திங்களன்று ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ள நிலையில், பாதுகாப்புக்காக 2300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.  

அதிஉயர் பாதுகாப்பு பிரிவு கமாண்டா படையினர், 100 பெண் போலீசார் உள்பட 2,300 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். கோவிலில் அமைதியான முறையில் தரிசனத்தை உறுதிசெய்யவும், சபரிமலைக்கு வரும் பக்தர்களை பாதுகாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்படும் பட்சத்தில் கோவில் சன்னிதானம் பகுதியில் 50 வயதுக்குள் மேல் உள்ள 30 பெண் போலீஸ் அதிகாரிகளை சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக கேரள மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com