இந்திரா காந்தி தான் ஹிட்லர் போல் ஆட்சி புரிந்தார் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கருத்துக்கு பதிலடி தந்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் கூறுகையில்,
"காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டது அதிர்ச்சியளிக்கிறது. இந்திரா காந்தி தான் ஹிட்லர் போல் ஆட்சி புரிந்தார் என்று அவருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்" என்றார்.
முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பேசுகையில்,
"பாஜக ஆட்சியின் கீழ் நாட்டின் நிலை மிகவும் மோசமடைந்து விட்டது. அரசியலமைப்பையோ அல்லது பிற நிறுவனங்களையோ பாஜக, ஆர்எஸ்எஸ், பிரதமர் மோடி ஆகியோர் அழிப்பதை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது.
குறிப்பிட்ட சாதி, மதம் அல்லது இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு, அரசியலமைப்பு சட்டம் சொந்தமானது அல்ல. அது அனைத்து தரப்பு மக்களுக்கும் சொந்தமானது ஆகும்.
கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை நோக்கி பாஜகவால் 4 அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அப்படிப்பட்ட பாஜகவுக்கு, காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கவோ, கடந்த 70 ஆண்டுகால ஆட்சியில் என்ன பணிகள் செய்தீர்கள் என்று கேள்விகேட்கவோ உரிமை கிடையாது.
மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் ஆகியவற்றை ஒடுக்கும் பணியில் பாஜக ஈடுபட்டது. நாட்டில் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது. ஜெர்மனியில் முன்பு ஹிட்லர் என்ன செய்தாரோ, அதை இந்தியாவில் செய்ய வேண்டும் என்று மோடி நினைக்கிறார்.
அரசியலமைப்பு சட்டம் ஆபத்தில் உள்ளது. அதை அழிக்க பாஜக எடுத்து வரும் முயற்சிக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









