எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

மே 1 விடுமுறை ரத்து: திரிபுரா அரசின் செயலுக்கு வலுக்கும் கண்டனம் 

உழைப்பாளர் தினமான மே 1 -க்கான விடுமுறையை ரத்து செய்து திரிபுரா மாநில பாஜக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு, கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.  

News image
Updated On :5 நவம்பர் 2018, 5:35 pm IST

அகர்தலா: உழைப்பாளர் தினமான மே 1 -க்கான விடுமுறையை ரத்து செய்து திரிபுரா மாநில பாஜக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு, கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.  

2019-ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களை திரிபுரா மாநில பாஜக அரசு சனிக்கிழமையன்று வெளியிட்டது. அதில் உழைப்பாளர் தினமான மே 1 -க்கான பொது விடுமுறை என்பது ரத்து செய்யப்பட்டு அது 'கட்டுப்படுத்தப்பட்ட  விடுமுறை' என்ற வகையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. மாநில பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது   

இதுதொடர்பாக திரிபுரா மாநில சிஜடியு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், திரிபுரா மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச தொழிலாளர் ஆணையத்திடம் சிஜடியு சார்பில் புகார் செய்ய உள்ளதாக தெரிவிக்கிறது. 

அதுபோல் திரிபுரா கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சங்கர் பிரசாத் தத்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திரிபுராவின் முதல் இடது முன்னணி அரசானது 1978-ஆம் ஆண்டில் மே 1-ஆம் தேதியை சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்தது. ஆனால் தற்போதுள்ள பாஜக அரசானது எந்த காரணமும் இல்லாமல் அதை ரத்து செய்துள்ளது. 

மே தினம் தொடர்பாக எந்த நிகழ்வுகளும் அன்று நடைபெறுவதை தடுக்கும் விதமாக இந்த அரசு எடுத்துள்ள முயற்சிக்கு எதிராக, சிஐடியு சார்பில் சர்வதேச தொழிலாளர் ஆணையத்திடம் முறையிட உள்ளோம். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.