நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தெலங்கானாவில் வென்று ஆட்சியமைத்தால் ஹைதராபாத்தின் பெயரை மாற்றுவோம்: பாஜக 

தெலங்கானா மாநிலத்துக்கு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தால், ஹைதராபாத்தின் பெயரை மாற்றுவோம் என்று பாஜக தெரிவித்துள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2018, 7:04 am

DIN


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்துக்கு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தால், ஹைதராபாத்தின் பெயரை மாற்றுவோம் என்று பாஜக தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜகவின் மாநிலத் தலைவர் ராஜா சிங் கூறுகையில், தெலங்கானாவுக்கு டிசம்பர் 7ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமைத்தால், எங்களது முதல் குறிக்கோள் மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதுதான். இரண்டாவது லட்சியம், ஹைதராபாத்தின் பெயரை மாற்றுவதுதான். தெலங்கானா உட்பட நாட்டின் நலனுக்காக போராடிய மிகப்பெரிய தலைவர்களின் பெயரை ஹைதராபாத்துக்கு சூட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் மட்டுமல்ல, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை அதாவது செகுந்தராபாத், கரீம்நகர் போன்ற நகரங்களின் பெயர்களையும் மாற்றுவோம் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.