வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் நியமனம்
எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியாக இருந்து வந்த அபிஜித் போஸ் வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக நியமனம்


எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியாக இருந்து வந்த அபிஜித் போஸ் வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களின் ஊடகமாக திகழும் 'வாட்ஸ்-அப்' செயலியை உலகம் முழுவதும் 130 கோடி வாடிக்கையார்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில், சுமார் 20 கோடி பேர் இந்தியர்கள் ஆவர்.
வாட்ஸ்-ஆப் மூலம் பகிரப்படும் சில தவறான செய்திகளால் வட மாநிலங்களில் வன்முறை நடப்பது தொடர் கதையாகி வருவதை அடுத்து தனது சேவையில் தவறான தகவலைப் பரவலாக்குவதைத் தடுக்க வாட்ஸ்-அப் நிறுவனம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் அதிகாரி ஒருவரை வாட்ஸ்-அப் நிறுவனம் சமீபத்தில் நியமித்தது.
இந்நிலையில், பிரபல மின்னணு பணப்பரிமாற்ற செயலியான எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வரும் அபிஜித் போஸ் என்பவர் வாட்ஸ்-ஆப் நிறுவனத்தின் இந்திய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...